
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையின் கட்டுமானம் முடிந்து உள்ளது. உட்புறம் அனைத்து மெஷின்களும் பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் சோதனைகள் செய்யப்பட உள்ளது. சோதனைகள் முடிந்த பின், வரும் ஜூன் மாதம் ஆலை திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியானது தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கியுள்ளது. மேலும், இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாகவும் தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.
இது போக வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும். இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தான் தற்போது தூத்துக்குடியில் கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடியில் 408 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் இத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பணிகள் முடிந்து சோதனைகள் முடிந்த பின் வரும் ஜூன் மாதம் ஆலை திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.