• vilasalnews@gmail.com

திண்ணை பிரச்சாரம் முதல் பூத்கமிட்டி அமைப்பு வரை... விளாத்திகுளத்தில் அதிரடி காட்டும் அதிமுக!

  • Share on

அதிமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக பூத் கமிட்டி அமைத்தல், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்ணை பிரச்சாரம் என விளாத்திகுளத்தில் சட்டமன்ற தொகுதியில், தூத்துக்குடி  வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ.இராஜூ எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி, முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.


அதன் ஒருபகுதியாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, மாநில அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதல்படி, தூத்துக்குடி  வடக்கு மாவட்ட செயலாளர், கடம்பூர் செ.இராஜூ எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி, முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில்,


மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என்.கே.பி.வரதராஜபெருமாள், முன்னாள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இணை செயலாளருமான முனியசக்தி ராமச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் குளத்தூரில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.


இந்நிகழ்வில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் ராமநாதன், விளாத்திகுளம் நகரச் செயலாளர் மாரிமுத்து, கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சண்முகச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், ஆனந்த் மற்றும் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் : தூத்துக்குடியில் அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மரியாதை!

2025 ஆம் ஆண்டின் சிறந்த திருநங்கை விருதை பெற்று தூத்துக்குடி ஆட்சியரிடம் வாழ்த்து!

  • Share on