
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் அவரது திருஉருவப்படத்திற்கு தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
பத்திரிகைத்துறை, கல்வி, விளையாட்டுத்துறை, பொது நலம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் முக்கிய பங்களிப்புகளை அளித்த டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் 12 வது நினைவு நாள் இன்று.
இதனையடுத்து, அவரது புகழை போற்றி வணங்கும் விதமாக, தூத்துக்குடியில் அவரது திருஉருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.