
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகில் கவர்னகிரி என்னும் கிராமத்தி 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தார் மாவீரர் சுந்தரலிங்கம்.
வீரர் சுந்தரலிங்கத்தை பொறுத்தவரையில், வெற்றி அல்லது வீர மரணம் என்பது தான் அவரின் குறிக்கோளாக இருந்தது. நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என் உடல் பொருள் ஆவியை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்று முழக்கமிட்ட மாவீரர்.
உலக வரலாற்றிலேயே தற்கொலைப்படை பிரிவு என்று ஒரு தனிப்படையை தொடங்கி அதற்கு தன்னையும் தன் முறைப்பெண் வடிவையும் பலியாகத் தந்தவர் மாவீரர் சுந்தரலிங்கம்.
ஆங்கிலேயப் படைகளால் வெல்ல முடியாத அந்த மாவீரரின் உயிர் விடுதலைக்கான வேள்வியில் வெடிமருந்து கிடங்கில் அடங்கியது. 08.09.1799 அன்று வீரமரணம் அடைந்தார்.
இத்தகைய மாவீரர் சுந்தரலிங்கனார் பிறந்த தினம் இன்று ( 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் )
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் அமைந்துள்ள சுதந்திரப்போரட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் மணிமண்டபத்தில், அன்னாரது 255 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (16.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆட்சியர் கூறுகையில்:-
சுதந்திரப்போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் அவர்கள் 1770-ம் ஆண்டு கவர்னகிரி கிராமத்தில் பிறந்தவர். சுதந்திர போராட்டத்தின்போது பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியவர். வாள் சண்டை, குத்துச்சண்டை, சிலம்பாட்டம், மல்யுத்தம், போன்றவற்றில் மிகவும் திறமையானவர். அவர் தனது கிராமத்தில் உள்ள குளத்தினை ஆக்கிரமிப்பதற்கு வந்தவர்களை வாள், சிலம்பு சண்டை மூலம் விரட்டியடித்தார். அவரது திறமை மற்றும் அறிவுத்திறனைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் தனது முதல் படைத்தளபதியாக வீரன் சுந்தரலிங்கம் அவர்களை நியமித்தார்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் அமைத்த ஆயுதக்கிடங்கில் வீரன் சுந்தரலிங்கம் அவர்கள் ஆடு மேய்க்கும் தொழிலாளி போல் வேடமிட்டு, தனது மாமன் மகள் வடிவு என்பவருடன் சென்று ஆயுதக்கிடங்கில் குதித்து தீயிட்டு அழித்தார். இந்தியாவின் முதல் தற்கொலைப்படை போராளி வீரன் சுந்தரலிங்கம் அவர்கள்தான். அன்னாரது தியாகத்தை போற்றும் விதமாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், வீரன் சுந்தரலிங்கம் வாரிசுதாரர் சூரியலட்சுமி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திமுக
ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி, அக்காநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, முறம்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி, சுடலைமணி, இளைஞரணி கார்த்திக், விக்கி மற்றும் வாரிசுதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக மரியாதை
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜகவினர் கவர்னகிரியில் அமைந்துள்ள சுதந்திரப்போரட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், மாநில பொதுச்செயலாலர் பொன்பாலகணபதி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன், திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம், திருநெல்வேலி மாவட்ட பார்வையாளர் நீலமுரளியாதவ், வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன், அய்யாச்சாமி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபக்குமார், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜா,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் பிரபு, ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து, முன்னாள் ஒன்றிய தலைவர் நங்கமுத்து, ஒன்றிய பொதுச் செயலாளர் முத்தமிழ்செல்வன், ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ், தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் வேல்ராஜ், விவசாயி மாவட்ட செயலாளர் பேச்சி, இளைஞர் அணி பொறுப்பாளர் சிலம்பரசன், ராபின், சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் சுனில், சிவ சண்முகம், மாரி, மாடசாமி உள்ளிட்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தமிழக வெற்றிக் கழகம் மரியாதை
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், மாவீரர் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.