
திருச்செந்தூர் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை வடிவமைத்த சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளினை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதன் பின்னர், ஆறுமுகநேரி நகர செயலாளர் நிவாஸ் கண்ணன் ஏற்பாட்டில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலையில், திருச்செந்தூர் ஆர்ச் அருகில் அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் ந.முத்தையாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாவட்ட துணைச்செயலாளர் முத்துக்கனி முருகேசன், மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் சிவனேஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்ரோகினி, திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் குட்டி, திருச்செந்தூர் நகர செயலாளர் முருகானந்தம், ஆழ்வை ஒன்றியம் குட்டி ராஜா, வனமுருக பிரகாஷ், சங்கரநாராயணன், பொன்இசக்கி, வெங்கடேஷ் ராஜேஷ், ஜாக்சன், நகர மகளிர் அணி செயலாளர் வேலவசெல்வி, பத்திரகாளி, வினோஸ் ரெக்ஸ், லூயிஸ்டண்,நடேசன், மாரிமுத்து, மணிகண்டன், வனமுத்து, காட்வின், சார்லஸ், கார்த்திக், நகர மாணவரணி நிர்வாகிகள் வேல்முருகன், முத்துராமன், இம்மானுவேல், நித்திஷ்நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜார்ஜ் இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்