• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாளால் வெட்டு!

  • Share on

தூத்துக்குடியில் மது போதையில் தகராறு செய்து இளைஞரை அரிவாளால் தாக்கிய நபர்களை போலீசார் தேடி  வருகின்றனர்.  


தூத்துக்குடி 3வது மைல் மெயின் ரோடு முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஸ்ரீராம் (23). கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அங்குள்ள ஒரு ஹோட்டல் எதிரே நின்று கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் தகராறு செய்து ஸ்ரீராமை சரமாரியாக அரிவாளால் தாக்கினார்களாம். 


இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசர் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் மீன் பிரியர்களுக்கு ஷாக்... இனி விலை உயரும்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

  • Share on