தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் வளர்த்து வந்த ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள 13 பறவைகள் திருடுபோனது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் சிங்கராஜ் (57). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மொட்டை மாடியில் வெளிநாட்டு பறவைகள் வளர்த்து வருகிறாராம். இந்நிலையில் நேற்று இரவு கூண்டில் அடைத்து வைத்திருந்த 13 பறவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சம் ஆகும். இதுகுறித்து சிங்கராஜ், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் சங்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.