• vilasalnews@gmail.com

தூத்துக்குடி - சென்னை இடையே வாரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் : பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி -சென்னை சிறப்பு ரயில்கள் மற்றும் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம்  ரயில்கள்  இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பயணிகள் நலச் சங்கம் மாவட்ட  செயலாளர் மா. பிரமநாயகம் அனுப்பியுள்ள மனுவில், 


"தூத்துக்குடி - சென்னை இடையே கொரோனா காலத்திற்கு முன்பு குருவாயூர் சென்னை ரயிலுக்கு தூத்துக்குடியில் இருந்து லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. தற்போது அது இயக்கப்படாமல் உள்ளது. தூத்துக்குடி சென்னை முத்து நகர் ரயில் எப்போதும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக காணப்படுகிறது. 


இதற்காக தங்கள் நிர்வாகம் அவ்வப்போது ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி இணைக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலை சரி செய்கிறீர்கள். ஆனால் அதையும் தாண்டி காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. 


கோடைகாலத்தில் இதை சரி செய்யும் வகையாக தூத்துக்குடி - சென்னை இடையே தினசரி பகல் நேர ரயில் இயக்க வேண்டும்.  தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாரத்தில் இரண்டு நாட்கள் (வியாழன், சனி)  இயக்கப்படுகிறது. 


இதை கூடுதலாக, தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் வாரத்திற்கு மூன்று நாட்கள் தூத்துக்குடி - சென்னை இடையே இரவு நேர சிறப்பு ரயில்கள்  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடிக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட மதுபாட்டில் : இளைஞர் கைது!

தூத்துக்குடியில் 104 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!

  • Share on