
தூத்துக்குடிக்கு ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நேற்று மைசூரில் இருந்து வந்த விரைவு ரயிலில் இரும்பு பாதை காவல் நிலைய போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணியின் பையை சோதனை செய்யதபோது, அதில் அவர் வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் சேர்வைக்காரன் மடம் மேலதெருவை சேர்ந்த வெள்ளையா மகன் முத்துக்குமார் ( 28 ) என்பதும், பெங்களூரில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.