• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகி வீட்டின் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சாலைப்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருராஜ். இவர் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி பிரியா முன்னாள் மாவட்ட கவுன்சிலர்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் குருராஜ் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த பூந்தொட்டி, பூச்செடிகளை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் வீட்டின் முன் கேட் பகுதி மற்றும்  வீட்டின் கதவு, கதவில் இருந்த கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.


சம்பவம் நடந்த போது குருராஜ் வீட்டில் இல்லை வெளியே சென்றுள்ளார். அவரது மனைவி பிரியா மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டிலிருந்துள்ளனர். 


இதுகுறித்து குருராஜ் மனைவி பிரியா கயத்தார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வீட்டின் முன்பிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த கல்லூரணி கிராம பெண்கள்

தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பிரிந்து போன இளைஞரின் உயிர்!

  • Share on