• vilasalnews@gmail.com

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கொடுத்த வரவேற்பு... தூத்துக்குடிக்கு பெருமை!

  • Share on

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் ரயில் பாலம் கட்டப்பட்டது.


இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்ற பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில், தன்னுடைய உறுதித்தன்மையை படிப்படியாக இழக்கத் தொடங்கியது.


இந்த சூழலில் தான், ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. இந்தப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, ரயில்கள் இயக்கிப் பார்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், புதிய ரயில் பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார். அவரது வருகையையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக, நேற்றைய தினம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு பனைஓலை கூட்டுறவு சங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பனை ஓலையினால் செய்யப்பட்ட பூச்செண்டை வழங்கி வரவேற்பு அளித்தார்.


கைவினை பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவும், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு பகுதியின் தனித்துவம் மிக்க கைவினை பொருட்களின் சிறப்பினை எடுத்துக்காட்டும் விதமாகவும், பிரதமர் மோடிக்கு பனை ஓலை பூச்செண்டை வழங்கி பனைத் தொழிலை ஊக்குவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தூத்துக்குடி பொதுமக்கள் சார்பில் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

  • Share on

பேஸ்புக் பழக்கம்... ரூ.34 லட்சம் மோசடி : கேரள தம்பதியை கைது செய்த தூத்துக்குடி போலீஸ்!

தூத்துக்குடியில் அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் முழு விவரம்!

  • Share on