• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர்!

  • Share on

வஃக்பு வாரிய சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆணையின்படி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல்படி, மத நல்லிணக்கத்திற்கும், சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வஃக்பு சட்ட திருத்தத்தினை முழுமையாக திரும்ப பெற மத்திய அரசினை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில்  திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில், நேற்று (05.04.2025) மாலை  மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் தலைமை தாங்கினார்.  மாவட்ட இணைச்செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர்கள் சிவனேஸ்வரன், முத்துக்கனி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஸ்கர், திருச்செந்தூர் நகர செயலாளர் முருகானந்தம் , உடன்குடி ஒன்றிய செயலாளர் பிரசாத், திருச்செந்தூர் குட்டி, ஆழ்வை ஒன்றியம் குட்டி ராஜா, ஆறுமுகநேரி நகர செயலாளர் நிவாஸ் கண்ணன் , காயல்பட்டினம் நகர செயலாளர் ஹனிபா, புன்னைக்காயல் சேவியர், வீரபாண்டியன்பட்டிணம் சர்க்கார் மதன், அமலிநகர் விவேக், வழக்கறிஞர் அணி ராஜிவ் காந்தி, உடன்குடி  ஹசன், மகளிரணி விபினா, ஆனந்தி, பிளெஸ்ஸி, அபர்ணா மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட, திருச்செந்தூர் சட்டமன்ற, ஒன்றிய , நகர , பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை.... இளைஞருக்கு வாழ்நாள் சிறை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடியில் அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் அறிவிப்பு!

  • Share on