• vilasalnews@gmail.com

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

  • Share on

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மதன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


மாவட்டச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஷாம், பிரதீப், நந்தகுமார், அருண்பாண்டி, அருண்குமார், ஆதி, லோகேஷ், திலீபன், முத்துவேல், சுப்பிரமணி, சுபாஷ், குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

  • Share on

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்.... கனிமொழி எம்.பி., கோரிக்கை!

சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை.... இளைஞருக்கு வாழ்நாள் சிறை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on