
கோவில்பட்டியில் ரயில் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (42). இவர் கோவையில் ஒரு விடுதி மெஸ்சில் பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டிக்கு வந்து உள்ளார். கடந்த 30 ஆம் தேதி ரயில் தண்டவாளம் அருகே அமர்ந்து இருந்த அவர், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.