• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பதுங்கியிருந்த தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்!

  • Share on

மனைவியை கொன்ற வழக்கில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதியை தூத்துக்குடியில் வைத்து நெல்லை டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற ராஜூ ( 42 ).  இவர் மனைவியுடன் நெல்லையில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியில் குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.


இதை அடுத்து டவுன் போலீசார் ராஜூவை கைது செய்தனர். இவ்வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


இதை அடுத்து, தண்டனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராஜூ ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் திடீரென தலைமறைவானார். இதனிடையே வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் ராஜூவிற்கு ஏற்கனவே அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜூவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.


போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி தருவை குளம் பகுதியில் பதுங்கி இருந்த ராஜூவை நெல்லை டவுன் போலீசார் கைது செய்தனர். அவரை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை மறுதினம் ( மார்ச்.,29 ) திமுக ஆர்ப்பாட்டம்!

தொடரும் தூத்துக்குடி மாநகராட்சியின் வரி உயர்வு... அலறும் மக்கள் : அதிமுக, திமுக கூட்டணி கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

  • Share on