
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை (MGNREGA) வழங்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒன்றிய அரசு நிதியின் முலம் கொடுக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய நூறு நாள் வேலைத் திட்ட நிதியில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகின்றது.
இந்த நிலையில், தி.மு.க தலைவர் தளபதி அறிவித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ரூ.4034 கோடியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கழக ஒன்றிய அமைப்புகளில் இரண்டு இடங்களில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமையில் கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் அந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.