
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வைப்பாற்று வடிநிலக் கோட்டத்தில் விளாத்திகுளம் வட்டம், L.வெங்கடேசபுரம் கண்மாய், புதுசின்னையாபுரம் கண்மாய், மாவிலோடை, சின்னூர், முத்தையாபுரம், இராமச்சந்திராபுரம், விளாத்திகுளம் மற்றும் வைப்பாற்று தடுப்பணைகள் ஆற்றங்கரை அணைக்கட்டு ஆகியவற்றை ரூ. 8 கோடியே 30-லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கவும்,
எட்டையாபுரம் வட்டம், நம்பிபுரம் கண்மாய்க்கு நீர் வழங்கும் முத்துலாபுரம் கிராமத்தில் வைப்பாற்றின் குறுக்கே ரூ.29 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுவதற்கும்,
எட்டையாபுரம் வட்டம், கீழ்நாட்டுக்குறிச்சி கண்மாய், அருணாச்சலபுரம் கண்மாய், T.புதுப்பட்டி கண்மாய்,சிந்தலக்கரை கண்மாய், கருப்பூர் கண்மாய் மற்றும் கீழ்நாட்டுக்குறிச்சி தடுப்பணை ஆகியவற்றை ரூ.3 கோடி 49 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கவும்,
என மொத்தம் ரூ.40 கோடியே 79 லட்சம் நிதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரையும், பரிந்துரை செய்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.