
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் 10 பேர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, மாற்று மதத்தினரை அவர்கள் சார்ந்த மதத்திற்கு கட்டாய மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, அங்கு சென்ற போலீசார், கட்டாய மதமாற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட 10 பேரையும் காவல் நிலையம் அளித்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இனிமேல் இதுபோன்று கட்டாய மதமாற்றம் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை அனுப்பினர்.