
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பற்றியும், பாஜக கட்சியில் உள்ள பெண்கள் பற்றியும் அருவருக்ககத்தக்க வகையில் தகாத வார்த்தையால் பேசி சமூக வலைதளமான You tube-ல் பதிவேற்றம் செய்த திமுகவை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையம் நிலையத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் ஆய்வாளருக்கு பாஜக நிர்வாகி வேல்முருகன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறேன். மேலும் தூத்துக்குடி தெற்கு மாவட்டம், பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறேன்.
நான் 26.03.2025 இன்று காலை 8.00 மணிக்கு எனது வீட்டில் அமர்ந்து இணையவழியில் தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்த போது எதார்த்தமாக அரசியல் ஒலி என்கிற You tube Channel-ஐ பார்க்கும் போது அதில் திமுகவை சேர்ந்த கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள பெண்களை எல்லாம் அவதூறாகவும் எங்கள் மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களையும், அவரது மனைவி திருமதி.அகிலா என்பவரையும் மற்றும் கட்சியின் பெண் தலைவர்களான திருமதி.வானதி சீனிவாசன் அவர்களையும், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களையும், மற்றும் திருமதி.குஷ்பு, நமிதா, விஜயதரணி, மதுவந்தி போன்ற அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.
குடியாத்தம் குமரனின் You tube Channel ஆன Mobile journalist என்ற வலைதளத்தில் உள்ளே சென்று பார்த்த போது பல வீடியோக்கள் அசிங்க அசிங்கமாக பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில் மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமனையும் அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்
இது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் கனம் ஐயா அவர்கள் கருணை கூர்ந்து இவ்வாறு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கொச்சை வார்த்தைகளால் அவதூறாக பேசிவரும் சமூக விரோதி குடியாத்தம் குமரன் மீது கீழ்கண்ட சட்டபிரிவுகளின் கீழ் Sec.67A Information Technology Act, Sec. 79, 356, 296 BNSS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புகார் அளிக்கும் போது, விவேகம்ரமேஷ், சிவராமன், வீரமணி, லிங்கசெல்வன், பாலமுருகன், காளிராஜா, ஜெயக்குமார், சிவகணேசன் சந்தனகுமார், மாவட்ட செயலாலர் வெள்ளத்தாய், முத்து பெரியநாயகம், சக்திவேல், கனி, சொக்கலிங்கம், மாரியப்பன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.