• vilasalnews@gmail.com

ஊருக்குள் தெரியாதவர் நடமாட்டமா? யோசிக்க வேண்டாம் உடனே செய்து விடுங்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (25.03.2025) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மற்றும் புத்தன்தருவை ஆகிய பகுதிகளுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (25.03.2025) தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியதாழை மற்றும் புத்தன்தருவை கடற்கரை பகுதி ஆகிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், சந்தேகப்படும்படியாக அந்நிய நபர்கள் ஊருக்குள் சுற்றித்திரிந்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ காவல்துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.


இந்நிகழ்வின், போது சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

  • Share on

பிள்ளைகள் ஆசைக்காக இதை அனுமதிக்காதீர்கள் : தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

தூத்துக்குடியில் அரசு மானியத்தில் கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை பண்ணை அமைத்திட கலெக்டர் அழைப்பு!

  • Share on