
தூத்துக்குடி மதுவிலக்கு தனி படை காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி வடக்கு பீச் ரோடு பூங்கா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேரை சந்தகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கீதாஜீவன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் ( 22 ), 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அருண்குமார் ( 19 ), புண்ணியகோடி மகன் பூவை மூர்த்தி வினோ ( 21 ), முத்துகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த பழனிசாமி மகன் சௌந்தரபாண்டியன் ( 21 ) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு பைக்குகள், நான்கு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதில் தப்பி ஓடிய கபிலன் என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.