• vilasalnews@gmail.com

இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on

திருச்செந்தூா் அருகே இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட 2 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தளவாய்புரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி என்ற சுதா (25). திருச்செந்தூா் அருகே காந்திபுரத்தைச் சோ்ந்த நயினாா் மகன் கன்னிமுத்து (40) என்பவா் 2011ஆம் ஆண்டு தளவாய்புரத்திலுள்ள முத்தாரம்மன் கோயில் கொடை விழாவுக்கு பந்தல் அமைக்க வந்தாா். அப்போது, அவருக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். 


இது தொடா்பாக இரு குடும்பங்களிடையே பிரச்னை ஏற்பட்டதால், கன்னிமுத்துவிடம் பேசுவதை தமிழ்ச்செல்வி நிறுத்திவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த கன்னிமுத்து 2014 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த தமிழ்ச்செல்வியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா். இதனைடுத்து புகாரின்பேரில், திருச்செந்தூா் போலீசார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.


இந்த வழக்கு தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை நீதிபதி பீரித்தா விசாரித்து, கன்னிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சேவியா் ஞானபிரகாசம் ஆஜரானார்.

  • Share on

தூத்துக்குடியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்திற்கு வருகிறது!

தூத்துக்குடியில் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் 4 பேர் கைது!

  • Share on