• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்திற்கு வருகிறது!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்களுக்கு வரும் 29.03.2025 அன்று பொது ஏலம் விடப்படுகிறது என மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் மதுவிலக்கு தொடர்பான குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 29.03.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைத்து பொது ஏலம்  நடைபெற உள்ளது.


மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 27.03.2025 மற்றும் 28.03.2025 ஆகிய 2 நாட்கள் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.


மேலும் 29.03.2025 அன்று காலை 08.00 மணிக்குள் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ரூபாய் 1000/- (ஆயிரம் மட்டும்) முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். முன் பணம் செலுத்திய நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.


இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் : 9363229366ல் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என  மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

அசத்திய தூத்துக்குடி முதலாளி... லாபத்தில் ஊழியர்களுக்கு பைக், தங்கநாணயம் கொடுத்து விருந்து வைத்து கொண்டாட்டம்!

இளம்பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on