• vilasalnews@gmail.com

அசத்திய தூத்துக்குடி முதலாளி... லாபத்தில் ஊழியர்களுக்கு பைக், தங்கநாணயம் கொடுத்து விருந்து வைத்து கொண்டாட்டம்!

  • Share on

தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு லாபத்தில் ஒரு பங்கை வைத்து பைக்குகள், தங்க நாணயங்களை வழங்கி ஊழியர்களுக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீனுடன் கறிவிருந்து என அசத்தியுள்ளார் தூத்துக்குடி தனியார் டிராவல்ஸ் பேருந்து உரிமையாளர்.


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாடு பகுதியை சேர்ந்த பட்டுராஜா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினம்தோறும் சென்னைக்கு  பேருந்து சேவைகளை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியில் நடந்தது.


இந்த விழாவில், அவரது நிறுவனத்தின் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், டிரைவர்கள், க்ளீனர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து 2 ஆம் ஆண்டு துவக்க விழாவின் போது சிறப்பாக செயல்பட்ட டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோரை தேர்வு செய்து 3 நபர்களுக்கு பைக்கும், 10 கிராம், 8 கிராம், மற்றும் 6 கிராம் கொண்ட தங்க நாணயங்கள் தலா ஒருவருக்கும் வழங்கினார். மேலும் 100 நபர்களுக்கு 1500 ரூபாய் மதிப்புள்ள கிப்ட் பொருள்களை அந்நிறுவனத்தின் உரிமையாளர் பட்டுராஜா வழங்கினார்.


தொடர்ந்து தனது நிறுவனத்தில் பணிபுரிந்த டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், ஊழியர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து சுடச்சுட மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன், உள்ளிட்ட அசைவ விருந்து வழங்கி அசத்தினார்.


மேலும், அடுத்த ஆண்டு சிறப்பாக செயல்படும் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள் மற்றும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் புதிய இன்னோவா கார் ஒன்றை பரிசாக வழங்குவதாகவும் அந்நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாநகரில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இப்படியா... இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை!

தூத்துக்குடியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்திற்கு வருகிறது!

  • Share on