திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இருண்ட மாநிலமாக தான் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
குளைச்சல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிகொடி ஏந்தி வெல்வோம் என்ற பேரணியில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:
தமிழகத்தில் தென் மாவட்டங்ள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தொகுதிகளை கேட்டு வருகின்றோம் என்ற அவர் எங்களின் இலக்கு இரட்டைபடையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் அமருவார்கள் என்றார்.
அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. மேலும் சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பது திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று தெரிவிப்பது போன்ற விசயங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம் அப்படி வந்தால் தமிழகம் இருண்ட மாநிலமாக-தான் இருக்கும் கட்ட பஞ்சாயத்து, நில அபகறிப்பு போன்ற செயல்கள் நடைபெறக்கூடும் அதைபோல்
தமிழ் கடவுள்களை அவதூறாக பேசிவருவது திமுகவின் வாடிக்கையாக உள்ளது.
முருகபெருமானின் கந்த சஷ்டி கவசம் பற்றி இழிவுபடுத்தி பேசியவர்கள் பின்னனியில் இருப்பவர்கள் திமுக தான் என்று திமுகவினரை குற்றம்சாட்டினார்.
மேலும் ராகுல்காந்தி தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு மத்திய அரசை விமர்சனம் செய்தது தவறு எனவே அது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.
மேலும் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மூன்றாவது, நான்காவது கூட்டணி உருவாகுவது சகஜம்தான் ஆனால் நிலைக்காது.
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நல்ல தொகுதிகளை கேட்டு வருகின்றோம். எங்களின் இலக்கு இரட்டைபடையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் அமருவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், திருநெல்வேலி மாவட்ட பார்வையாளர் மு. பாலாஜி, திருநெல்வேலி மாவட்ட தலைவர் மஹாராஜன், ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், ஒபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், சிறுபான்மை அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜே வி. அசோகன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கே.பாலமுருகன், மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.