• vilasalnews@gmail.com

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இருந்த I LOVE TUTY எங்கே?

  • Share on

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஐ லவ் தூத்துக்குடி வாசகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் I love Tuty என்கிற வாசகம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த வாசகமானது கடற்கரையை ஒட்டி மையப் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு வரக்கூடியவர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்திருந்தது. 


மேலும் இந்த முத்துநகர் கடற்கரையை அலங்கரிக்கும் விதமாக மேற்படி வார்த்தை அமைந்துள்ளதால் அந்த இடத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்ற நபர்களும் பொழுதுபோக்கு வருகின்ற பொதுமக்களும் செல்பி பாயிண்ட் எனும் படம் எடுக்கக்கூடிய இடமாக அதனை பயன்படுத்தி வந்தார்கள். 


தற்போது அந்த இடத்தில் உள்ள ஐ லவ் தூத்துக்குடி என்கிற வாசகம் அகற்றப்பட்டுள்ளது. முத்துநகர் கடற்கரை பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மாநகர நிர்வாகம் உடனடியாக ஏற்கனவே உள்ளது போல அந்த இடத்தில் ஐ லவ் தூத்துக்குடி என்று அமைக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் வழக்கறிஞர் சுப.மாடசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

  • Share on

அடுத்தடுத்து வெளியாகும் தகவல்.... மகிழ்ச்சியில் தூத்துக்குடி!

தூத்துக்குடி பியல் சிட்டியிலிருந்து மில்லியன் டாலர் சிட்டியாகிறது!

  • Share on