
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சர்வதேச மாநாட்டு கருத்தரங்குகள் நடைபெறும் வகையிலான வர்த்தக மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, கோவை, கிருஷ்ணகிரிக்கு அடுத்து தூத்துக்குடி மிகப்பெரிய தொழில் நகரமாக உருவெடுத்துள்ளது. எனவே, அங்கு தொழில் நிறுவனங்கள், மாநாடு, கருத்தரங்கம், தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடத்த வசதியாக வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவை, சென்னையில் உள்ள வர்த்தக மையம் போல் அதிக இட வசதியுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட உள்ளது. இதற்காக இடம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. விரைவில் இடம் தேர்வு செய்யப்படும். இதனால், சென்னையை போல் தூத்துக்குடியிலும் பல தொழில் மாநாடுகள் அடிக்கடி நடத்தப்படும். இது தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சர்வதேச மாநாட்டு கருத்தரங்குகள் நடைபெறும் வகையிலான வர்த்தக மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.