
தூத்துக்குடி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக இருந்த கெளதம் பாண்டியன், அக்கட்சியில் இருந்து வெளியேறி தன்னை தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மேலும், கெளதம் பாண்டியன் அவருடைய ஏற்பாட்டில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளான அருள் டிக்சன், முனிஸ்வரன், சரண், விக்னேஷ், மாருதி ராஜா, ஹரி நிர்மல், கணேஷ் குமார், மணிகண்டன், ஹரிஹரன், மனோஜ், தமிழ்ச்செல்வன், கார்த்திக், மகாராஜா, அருண்குமார், சுதன், வினோத் உள்ளிட்டோரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும், நான் 2016இல் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், ஏறக்குறைய 8ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்து வந்தேன். தற்போதைய சுயநல அரசியலை நான் விரும்பவில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஆனால், அதற்கும் வாய்ப்பில்லா தலைமை?
அதனால், கனத்த இதயத்துடன் கழகத்தில் இருந்து என்னை நான் விலக்கி விட்டேன். மேலும் என்னுடைய எதிர்க்கால அரசியலைக் கருத்தில் கொண்டு, நான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், வருங்கால முதல்வர் தளபதியார் அவர்கள் வழியில், அவர்களின் ரசிகனாய் என்னுடைய பயணத்தைத் துவங்குகிறேன் என கௌதம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.