
தூத்துக்குடி மாவட்ட பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக மண்டல நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குலசேகரநத்தத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதியும், தொழிலதிபருமான சண்முகராஜ், திமுகவில் தாம் வகித்த அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியின் பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலையிலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையிலும், ஆழ்வை கிழக்கு மண்டல துணைத்தலைவர் மாரித்தங்கம் ஏற்பாட்டிலும் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, உமரி சத்தியசீலன், மாவட்டத் துணைத்தலைவர் சிவராமன், செல்வராஜ், மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாலாஜி , கனல் ஆறுமுகம், ஸ்ரீவைகுண்டம் மண்டல தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.