
தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ. அண்டோவிற்கு அவர் பணி செய்கிற புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் பாராட்டு விழா 19.3.2025 அன்று நடைபெற்றது.
விருது பெற்ற ஆசிரியரை சேசு சபையினரின் சவேரியானா இல்ல அதிபர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சே.ச., பள்ளியின் தாளாளர் அருள்முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. தலைமையாசிரியர் அருள்திரு. அமல்ராஜ் சே.ச. ஆகியோர் வாழ்த்தினர். ஆசிரியர் கவிஞர் காலின்ஸ் வாழ்த்துப்பா பாடினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வ.உ .சி. கல்வியியல் கல்லூரியின் தாளாளர் ஏ.பி.சி.வி. சண்முகம் நெய்தல் அண்டோவின் மேடைப்பேச்சு, எழுத்து, சமூகப் பணி என்ற முப்பெரும் பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்று சிறப்புரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து மண்ணின் வரலாற்றைத் துணிவுடன் பதிவு செய்யும் எழுத்துப் பணியைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு சவேரியானா இல்லத் தலைவர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சே.ச. தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அருள்முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. மற்றும் தலைமையாசிரியர் அருள்திரு. அமல்ராஜ் சே.ச. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவித் தலைமையாசிரியர்கள் அருள்திரு. வளன் சே.ச., ஜார்ஜ் பீட்டர் பாபு, ஞானசேகர், ஹம்பிரி மிராண்டா, ஆசிரியர் செயலர் பெனிட்டன் ஆகியோர் விருது பெற்ற ஆசிரியருக்கு வாழ்த்தினைக் கூறி மகிழ்ந்தனர். பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்று ஆசிரியரைப் பாராட்டினர்.
முன்னதாக, பள்ளியின் மாணவர்கள் இறை வணக்கம் பாட, நிகழ்வுக்கு வந்தோரை ஆசிரியர் பிரான்சிஸ் ஹென்றி வரவேற்க, ஆங்கில வழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் டைசன் நன்றியுரை கூறினார். நிகழ்வை ஆசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். இறுதியாக, விருது பெற்ற ஆசிரியர் நெய்தல் யூ. அண்டோ ஏற்புரை வழங்கினார்.