
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பைக் மீது லாரி மோதியதில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியை அடுத்த ஸ்பிக் நகர் அருகே உள்ள தவசி பெருமாள் சாலையைச் சேர்ந்தவர் தோமினிக் அண்டோ மனைவி மரிய அன்பரசி ( 37 ) . இவர் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகர் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். முத்தையாபுரம் அருகே சென்றபோது சாலையின் மறு முனையில் இருந்து திரும்பிய லாரி இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அன்பரசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் பெண் ஒருவர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.