• vilasalnews@gmail.com

விபத்து வழக்கு : ரூ.3.10 கோடி இழப்பீடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

  • Share on

தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3.10 கோடி இழப்பீடு வழங்குமாறு கார் உரிமையாளர், காப்பீடு நிறுவனத்திற்கு தூத்துக்குடி மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி துறைமுகம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவரது கணவர் ராஜேந்திர பிரசாத்.  இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பைக்கில் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மோதி பலியானார். இது தொடர்பாக நஷ்ட ஈடு கோரி செண்பகவள்ளி வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே இந்த மனுவானது சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் 3.10 கோடி நஷ்ட ஈடாக கார் உரிமையாளர் மற்றும் காப்பீடு நிறுவனம் ஆகியோர் வழங்க முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தி முன்னிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா, ஓய்வு பெற்ற நீதிபதி முத்துராஜ், வழக்கறிஞர் யூஜியானா, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளையராஜா, எதிர் மனுதாரர் தரப்பில் காப்பீடு கழகத்தின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணி ஆஜராகினர்.

  • Share on

தூத்துக்குடியில் விபத்து... சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு!

குளத்தூர் அருகே விபத்து... ஒருவர் பலி 2 பேர் படுகாயம்!

  • Share on