• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் விபத்து... சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 


தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்தவர் அந்தோணி (34). டிரைவர். இவர் பெட்ரோல் பங்கில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு 4 ஆவது ரயில்வே கேட் அருகே உள்ள பக்கிள் ஓடை பாலம் மங்களபுரம் விலக்கில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 


இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி ரவுடி... சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்

விபத்து வழக்கு : ரூ.3.10 கோடி இழப்பீடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

  • Share on