• vilasalnews@gmail.com

அடகு வைத்த 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுப்பு.. தூத்துக்குடி நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது!

  • Share on

தான் அடகு வைத்த சுமார் 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுப்பதாக  தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவன பெண் உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி  ஜார்ஜ் ரோடு, காந்திநகரில் வசிக்கும் ஜியோ என்பவரது மனைவி ஜெயராணி ( 34 ). இவர் அதே தூத்துக்குடி  ஜார்ஜ் ரோடு, காந்திநகரில் ஜீவா ஹெர்மனா என்ற பெண்ணிற்கு சொந்தமான நிதி நிறுவனத்தில், கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் 80 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள சுமார் 135 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து சுமார் 53 லட்சம் பணம் வாங்கியுள்ளாராம். 


இந்த நிலையில், மேற்படி தங்க நகைக்களுக்கான அசல் மற்றும் வட்டி தொகையை,  திருப்ப செலுத்த சென்றபோது நகைகளை திரும்ப தர முடியாது என்று கூறியதோடு,  நிதி நிறுவனம் உரிமையாளர் ஜீவா ஹெர்மனா, அவரது கணவர் மெசிங்டன் மற்றும் அவர்களது கூட்டாளி மகேஸ்வரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, ஆபாசமான வார்த்தைகளோடு திட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும், எனது தாயார் பெயரில் உள்ள சொத்தையும் அடமானம் வைத்து பெற்ற பணத்தையும் மோசடி செய்து, சொத்து பத்திரத்தையும் தர மறுக்கின்றனர்.


எனவே, நான் அடகு வைத்த 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுத்து கொலை மிரட்டல் விடுக்கும் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள நிதி நிறுவன உரிமையாளர் ஜீவா ஹெர்மனா, அவரது கணவர் மெசிங்டன் மற்றும்  சங்கரவேல் மகன் மகேஸ்வரன் ஆகியோர் மீது உரியநடவடிக்கை மேற்கொண்டு, என்னுடைய நகை எனக்கு திரும்ப கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜெயராணி புகார் அளித்தார்.


அதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டதாக நிதி நிறுவன பெண் உரிமையாளர் ஜீவா ஹெர்மனாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகேஸ்வரனை தேடி வருகின்றனர்.

  • Share on

நாளை வரலாம்.. தூத்துக்குடி எஸ்.பி., ஆபிசில் இருந்து வந்த தகவல்!

எட்டயபுரம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : 5 வருடம் சிறை தண்டனை

  • Share on