தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் 21.11.2020, 22.11.2020 மற்றும் ; 12.12.2020, 13.12.2020 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2021 தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை பொது மக்களிடமிருந்து பெறும் பொருட்டு, சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 21.11.2020 (சனிக்கிழமை) மற்றும் 22.11.2020 (ஞாயிற்றுக்கிழமை), மற்றும் டிசம்பர் மாதம் 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு முகாம் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையத்திலும் நடைபெறவுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலரிடமிருந்து படிவங்களை பெற்று,நிரப்பப்பட்ட படிவங்களை மேற்படி அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்கள் கைபேசி மற்றும் கணினியில் இணையதளம் மூலமாகவும், www.nvsp.in என்ற முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பம் அளிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் மேற்படிசிறப்பு முகாம் வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், (படிவம் -6) நீக்கவும், (படிவம் -7) திருத்தங்கள் மேற்கொள்ளவும் (படிவம் -8) மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து கொள்ளவும் (படிவம் -8யு) கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.