• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 689 பேருக்கு பிடியாணை : மாவட்ட காவல்துறை நடவடிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம்  செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த நபர்கள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தால் பிடியாணை  பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் இந்த ஆண்டு இதுவரை 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து ஆஜராகமலும், தலைமறைவாகவும் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறையால் தெரிவித்து கொள்ளப்படுகிறது. என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தது... அழையுங்கள் 1033

தூத்துக்குடியில் சமூக வலைதளத்தில் மோதலை ஏற்படுத்தும் பதிவு : போலீஸ் கொடுத்த எச்சரிக்கை!

  • Share on