• vilasalnews@gmail.com

ரேஷன் கார்டில் உங்க பெயர் இருக்கா? தூத்துக்குடி கலெக்டர் தகவல்!

  • Share on

பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய(eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் தகுதியுள்ள அனைத்து PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பதிவு செய்திட POS இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வெளியூரில் / வெளி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் தாங்கள் இருக்கும் ஊரிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய (eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இத தொடர்பாக சிறப்பு முகாம்கள் மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று விரல் ரேகை பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களது விரல் ரேகை பதிவுகளை பதிவு செய்த AAY/PHH குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2025 முதல் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்.


எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு : மாநகராட்சி நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தது... அழையுங்கள் 1033

  • Share on