• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு : மாநகராட்சி நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

  • Share on

தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தூத்துக்குடி மாநகராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட திரவியரத்ன நகர், எஸ்.வி.பி.எஸ் நகர், பாலசன் நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


"எங்கள் பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் முதல் முறையாக இங்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. 


இந்த பகுதியில் இருந்த காலி மனையில் பூங்காவிற்கான பணிகள் நடைபெறப் போவதாக மாநகராட்சி அதிகாரிகள் சொன்னார்கள். நாங்களும் அதை நம்பி மகிழ்சியடைந்தோம். ஆனால் தற்போது குப்பை கிடங்கிற்கான வேலை தான் நடைபெறுவதாக பணியாளர்கள் சொல்கின்றனர். எங்கள் பகுதி மாமன்ற உறுப்பினரும் இங்கே குப்பை கிடங்கு ஒன்று வரப்போகின்றது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. 


ஏற்கனவே சிப்காட் வளாகத்தில் உள்ள சுண்ணாம்பு கம்பெனியின் புகை மற்றும் எங்கள் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் பழைய இரும்பு பிளாஸ்டிக் கம்பெனியில் எரிக்கப்படும் புகையால் பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் வருகின்றது என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இங்கு பலபேருக்கு மூச்சுத் திணறல் ஆஸ்த்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகள் உள்ளது.


ஏற்கனவே, மழைக்காலத்தில் கழிவுநீர் கலந்து வெள்ளமென வருவதால் மிகவும் அவதிப்பத்தின்றோம். மேலும் குப்பைக் கிடங்கு இங்கு வந்தால் அந்தக் குப்பையும் மழைநீரில் கலந்து வந்து துர்நாற்றம் ஏற்படுவதுடன் நோயை பரப்பும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ராம்ஜி நகர் போன்ற பகுதிகளில் ஒரு ஏக்கருக்கு மேல் காலி இடம் உள்ளது. எனவே குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • Share on

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!

ரேஷன் கார்டில் உங்க பெயர் இருக்கா? தூத்துக்குடி கலெக்டர் தகவல்!

  • Share on