• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

  • Share on

தூத்துக்குடியில் 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு  தாமாக முன்வந்து சரி செய்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்


தூத்துக்குடி 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு, நேற்று (15.03.2025) அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம் அப்பகுதியில் இருந்த மணலை மூடையில் அள்ளி பள்ளத்தில் கொட்டி சரி செய்தார்.


சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்காமல் இருப்பதற்காக தாமாக முன்வந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட மேற்படி போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

  • Share on

திருச்செந்தூர் கோவிலில் திடீரென மயங்கிய பக்தர்... நொடியில் நிகழ்ந்த பரிதாபம்!

தூத்துக்குடி அருகே உருட்டு கட்டையால் கணவரை தாக்கிய மனைவி கைது!

  • Share on