
தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் உட்பட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விடுதியில் தங்கி இருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஏசய்யா மகன் சுரேஷ் (47) மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் சுரேஷ் (44) ஆகிய இருவரையும் இன்று (15.03.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.