
எம்.சாண்ட் குவாரி இயந்திரத்தில் சிக்கி ஓட்டப்பிடாத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடத்தைச் சேர்ந்த ஜான்சன் மகன் சாமுவேல் ( 25 ). இவர் நெல்லை மாவட்டம், காவல்கிணறு மங்கம்மாள் சாலை பகுதி அருகே எம்.சாண்ட் குவாரியில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இந்த குவாரியை காவல்கிணறு பகுதி சேர்ந்த அரவிந்தன் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சாமுவேல் குவாரி இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் பெல்ட்டில் சாமுவேலின் கை சிக்கியது. இதனால் அவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டதில் வெளியே வர முடியாமல் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பணகுடி போலீசார், சாமுவேலின் உடலை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.