
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மற்றும் கோவில்பட்டி வட்டங்களில் இன்று (14.03.2025) புதிய பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கயத்தாறு வட்டம், எட்டு நாயக்கன்பட்டியில் 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் அதேபோல் கயத்தாறு வட்டம், பன்னீர்குளத்தில் 16 பயனாளிகளுக்கும் மற்றும் வடக்கு இலந்தைகுளத்தில் 121 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதே போல், கோவில்பட்டி வட்டம் முப்பம்பட்டி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் வீடு கட்டாத காரணத்தினால் அது ரத்து செய்யப்பட்டு, மீண்டும் 184 பயனாளிகளுக்கு புதிய பட்டா வழங்குவதற்கான இடத்தினை பார்வையிட்டார்.
தொடர்ந்து, இலுப்பையூரணி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டாக்களில், மேற்படி நபர்கள் வீடு கட்டாத காரணத்தினால் பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடத்தினை பார்வையிட்டார்.
தொடர்ச்சியாக, பாண்டவர்மங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தலா மூன்று செண்டு வீதம் 1998 ஆம் ஆண்டு 502 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட்ஆசீர், கயத்தார் வட்டாட்சியர் சுந்தரராகவன், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள், வட்டாட்சியர் ராஜ்குமார் (ஆதிதிராவிடர் நலன்) ஆகியோர் உடனிருந்தனர்.