
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைத்து தர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து சட்டபேரவையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் 2025 - 2026 அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் , ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூர் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணைச் செயலாளர் சிவன், நகரச் செயலாளர் லிங்கராஜ், மாவட்ட வர்த்தக அணி முத்துகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, மாவட்டம் மருத்துவரணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கதுரை பாண்டியன்,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ஒன்றிய வர்த்தகர அணி காளியப்பன், புதியம்புத்தூர் கிளைச் செயலாளர் சற்குணபாண்டி, பாலகுருசாமி, பூவலிங்கம், இளைஞரணி பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.