
சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரியினங்களையும் 31.03.2025 க்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணையவழியில் செலுத்தி உரிய கணினி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு அறிவிப்பு என்னவென்றால், தாங்கள் தங்கள் கிராம ஊராட்சிக்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி (வீட்டு வரி) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 172, 174 மற்றும் 242 இன் படி செலுத்த கடமைப்பட்டுள்ளீர்கள். எனவே சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரியினங்களையும் 31.03.2025 க்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணைய வழியில் செலுத்தி உரிய கணினி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு தூத்துக்குடி ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.