• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் துணை தாசில்தார்கள் திடீர் இடமாற்றம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 5 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வரும் 5 துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி வந்த முருகன் மாற்றம் செய்யப்பட்டு, தூத்துக்குடி தாலுகா மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று துணை தாசில்தார் அருணா கலெக்டர் அலுவலகத்திற்கும், ராஜேஸ்வரி தூத்துக்குடி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், பாக்கியலட்சுமி திருச்செந்தூர் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், தனுஷ்கோடி ஸ்ரீவைகுண்டம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சிதம்பரநாதன் பதவி உயர்வு பற்றி திருச்செந்தூர் தாலுகா சிவில் சப்ளை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • Share on

எட்டயபுரம் அருகே இரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

ஏரல் பாலம் என்னாச்சு? நேரடி விசிட் அடித்த தூத்துக்குடி கலெக்டர்!

  • Share on