• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தவெக மாவட்ட செயலாளர் யார்? எகிறும் எதிர்பார்ப்பு... அறிவிப்பில் இழுபறி!

  • Share on

தமிழக வெற்றிக் கழகத்தின் 6ம் கட்ட மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. 25 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில், இன்றும் 19 மாவட்டச் செயலாளர்களின் பட்டியலே வெளியாகும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 6 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.


தவெக தலைவர் விஜய் நிர்வாக வசதிக்காக மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்பின் ஒவ்வொரு நாளும் 19 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை 95 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை அறிவித்த நிலையில், மீதமுள்ள 25 மாவட்டச் செயலாளர்களின் அறிவிப்பு இன்று வெளிவரும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தவெக சார்பாக வெறும் 19 மாவட்டச் செயலாளர்களின் நியமனம் தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்ததில் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. ஒரே தொகுதிகளில் சீனியர்கள் பலரும் இருப்பதால், மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது.


இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் மாவட்டச் செயலாளர்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள், மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்கள், பணபலம் கொண்டவர்கள் என்று பலரும் போட்டியில் இருப்பதால் 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க முடியாமல் தவெக தலைமை திணறி வருகிறது.


தூத்துக்குடியை பொறுத்தவரையில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கோவில்பட்டி விளாத்திகுளம் தொகுதிகள் வடக்கு மாவட்டமாகவும், ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி மத்திய மாவட்டமாகவும்,  ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் தெற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளதாம். இதில் ஓட்டப்பிடாரம் தூத்துக்குடி அடங்கிய மத்திய மாவட்ட செயலாளருக்கு கடும் போட்டி நிலவி வருவதால் தூத்துக்குடி மாவட்ட செயலாளரை நியமிப்பதில் இழுபறி உள்ளதாம்.

  • Share on

புதிய சாதனை நிகழ்த்திய தூத்துக்குடி துறைமுகம்!

ஒரே நாளில்; ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு!

  • Share on