
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் லூர்து செல்வின் ( 22 ). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த லூர்து செல்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.