• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இந்த ரூட்டில் பஸ் ஓட்ட விரும்புறீங்களா... உடனே விண்ணப்பியுங்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 63 வழித்தடங்களுள் நாளது தேதிவரையில் விண்ணப்பங்கள் பெறப்படாத கீழ்காணும் 36 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க அனுமதிச்சீட்டு வேண்டி விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தஇளம்பகவத் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 63 வழித்தடங்களுள் நாளது தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்படாத கீழ்காணும் 36 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க அனுமதிச்சீட்டு வேண்டி விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500.100=1600/- மற்றும் கால நிர்ணய கட்டணம் ரூ.600/- ஆக மொத்தம் ரூ.2200/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாச்சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் 15.03.2025-க்குள் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.


தூத்துக்குடி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்ட வழித்தடங்களான 


புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் முதல் சிவத்தையாபுரம் பேருந்து நிறுத்தம் வரையிலும், புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் முதல் ஸ்பிக் நகர் பேருந்து நிறுத்தம் வரையிலும், குறுக்கு சாலை பேருந்து நிறுத்தம் முதல் புதியம்புத்தூர் பேருந்து நிறுத்தம் வரையிலும், புதியம்புத்தூர் பேருந்து நிறுத்தம் முதல் ஒட்டநத்தம் பேருந்து நிறுத்தம் வரையிலும், குறுக்கு சாலை பேருந்து நிறுத்தம் முதல் எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம் வரையிலும், எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம் முதல் பசுவந்தனை பேருந்து நிறுத்தம் வரையிலும், எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம் முதல் பொம்மையாபுரம் பேருந்து நிறுத்தம் வரையிலும், சிலோன் காலனி பேருந்து நிறுத்தம் முதல் உமரிக்கோட்டை பேருந்து நிறுத்தம் வரையிலும், பழைய காயல் பேருந்து நிறுத்தம் முதல் மாவட்ட ஆட்சியர் பேருந்து நிறுத்தம் வரையிலும், புதியம்புத்தூர் பேருந்து நிறுத்தம் முதல் உமரிக்கோட்டை பேருந்து நிறுத்தம் வரையிலும், சவரி மங்கலம் பேருந்து நிறுத்தம் முதல் எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம் வரையிலும் ஓட்டப்பிடாரம் பேருந்து நிறுத்தம் முதல் நாகம்பட்டி பேருந்து நிறுத்தம் ஆகிய 12 வழித்தடங்களுக்கும் 



கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவல எல்கைக்குட்பட்ட வழித்தடங்களான 


எட்டையாபுரம் முதல் ஈராச்சி வரையிலும், எட்டையபுரம் முதல் கடலையூர் வரையிலும், எட்டையபுரம் பேருந்து நிலையம் முதல் கருப்பூர் வரையிலும், கட்டலாங்குளம் முதல் கயத்தார் பிரிவு வரையிலும், கயத்தார் பஸ்நிலையம் முதல் செட்டிகுறிச்சி வரையிலும், வேடநத்தம் முதல் வேப்பலோடை வரையிலும், எட்டையாபுரம் பேருந்து நிறுத்தம் முதல் குமரெட்டியாபுரம் பிரிவு வரையிலும், எம்.கோட்டுர் முதல் ராசாபட்டி ஆகிய 08 வழித்தடங்களுக்கும் 


திருச்செந்தூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்ட வழித்தடங்களான 


சாத்தான்குளம் முதல் தட்டார்மடம் வரையிலும், சாத்தான் குளம் முதல் உடன்குடி வரையிலும், தட்டார்மடம் முதல் மெய்யூர் வரையிலும், சாத்தான்குளம் முதல் பேய்குளம் வரையிலும், ஆத்தூர் பஜார் முதல் DCW சாகுபுரம் வரையிலும், ஆத்தூர் பஜார் முதல் நல்லூர் வரையிலும், மெய்ஞானபுரம் முதல் உடன்குடி பஞ்சாயத்து வரையிலும், MLA ஆபிஸ் முதல் சீருடையார்புரம் வரையிலும், தேரியூர் முதல் படுக்கபத்து வரையிலும், பரமன்குறிச்சி முதல் காயாமொழி வரையிலும், உடன்குடி முதல் மாநாடுதண்டுபத்து வரையிலும், நாசரேத் முதல் மலவராயநத்தம் வரையிலும், மணியாச்சி முதல் தெய்வசெயல்புரம் வரையிலும், குலசை முதல் திசையன்விளை வரையிலும், குலசை முதல் திசையன்விளை வரையிலும், குலசை முதல் திசையன்விளை ஆகிய 16 வழித்தடங்களுக்கும் ஆக மொத்தம் 36 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


இணைக்கவேண்டிய படிவம் மற்றும் ஆவணங்கள் 

1.SCPA Form with fees of Rs. 1500.100.600/-

2. Address evidence

3.Road worthy certificate from A.E/D.E.Highways

4. Tentative timings

5. Route-Map/Sketch

6.Solvency Certificate


  • Share on

மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்தை வளர்த்த நீங்கள்... அமைச்சர் கீதாஜீவனுக்கு எதிராக சீறிய தவெக அஜிதா ஆக்னல்!

தூத்துக்குடியில் விரைவில் இந்த பள்ளியை அமைக்க வேண்டும்... வஉசி துறைமுகம் நிர்வாகத்தை சந்தித்த பாஜக!

  • Share on