
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சுமார் 1000 நாட்டுப் படகுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் ( மார்ச் 11 ) நாளையும் ( மார்ச் 12) பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ஆலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் பலத்த காற்றும் வீசி வருகிறது.
இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.