• vilasalnews@gmail.com

தூத்துக்குடி... சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி சிறுவனை ஆயுதங்களால்  தாக்கிய ஒருவரை கைது செய்தும் மற்றும் 2 இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை இன்று (10.03.2025) காலை கெட்டியம்மாள்புரம் பேருந்து நிறுத்தம் அருகே மர்மநபர்கள் சிலர் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தனது மகனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார்.


இதுகுறித்து மேற்படி சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் (எ) பெரியவன் (19), மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகியோர்கள் சேர்ந்து மேற்படி சிறுவனை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.


உடனடியாக தனிப்படை போலீசார்  லெட்சுமணன் (எ) பெரியவனை கைது செய்தும், மற்ற 2 இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தாக்குதலுக்குள்ளான மேற்படி 17 வயது சிறுவன் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • Share on

தூத்துக்குடியில் திடீரென திரண்ட திமுக... அடுத்ததாக பாஜக; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தூத்துக்குடி & ஸ்ரீவைகுண்டம் விவசாயிகளே... கோட்டாட்சியர் சொன்ன தகவல்!

  • Share on